அக்கட தேசத்தில் ஸ்ருதி ஹாசன்!
ராகவ் குமார்
ஒரு சினிமா சுமார் 10 வருடங்களுக்கு பின்பு மீண்டும் வரவேற்பை பெறுமா? பெற்றுள்ளது. அதுவும் முதல் முறை வெளியிட்டை விட பல மடங்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. நமது அண்டை மாநிலம் ஆந்திராவில் இந்த அதிசயம் நடந்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஸ்ருதிஹாசன்,தனுஷ் நடித்து வெளியான படம் 3. இந்த படம் கலவையான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது.இந்த 3 படம்தான் தற்சமயம் ஆந்திராவில் மீண்டும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகி உள்ளது.
காதலும், காதல் திருமணத்திற்கு பிறகு வரும் பிரச்சனைகளும் இப்படத்தின் மையமாக இருக்கும். இந்த படம் மீண்டும் இப்போது வெளியான பின்பு அக்கட தேசத்து மணவாடுகள் நம்ம ஸ்ருதியை கொண்டாடி வருகிறார்கள். மேலும் 3 திரைப்படம் வெளியான பின்பு ஸ்ருதியின் மார்க்கெட் ஏறுமுகத்தில் உள்ளது.
கே ஜி. எப். புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாலர் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். நம்ம ஊர் பொண்ணுக்கு ஆந்திராவில் கொடிகட்டி பறப்பது நமக்கு பெருமைதானே!