வரப்போகுது படாஸ்.. லியோவின் 2வது பாடல் இன்று வெளியீடு!

#LeoDas #Badass
#LeoDas #Badass
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் 2ஆவது பாடல் இன்று வெளியிடப்படுகிறது. பாடலுக்கான ப்ரமோ வெளியாகிய 12 மணிநேரத்தில் இருபது லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இதனால் ட்டுவிட்டர் எக்ஸ் தளத்தில் Mr. #LeoDas #Badass எனும் ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகியுள்ளது.

லியோ படத்தின் முதல் பாடலாக நா ரெடி பாடல் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அந்த பாடலில் மதுபானங்கள் குறித்த வரிகள் இடம்பெற்றதுடன் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அப்போதே எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

லியோ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக எக்ஸ் தளத்தில் அண்மையில் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படத்தின் போஸ்டர்களும் வெளியாகின. மேலும் லியோ இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி எழும்பூர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் லியோ படத்தின் 2வது பாடலாக படாஸ் என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலையும் நா ரெடி பாடலை எழுதிய விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் இசையில் வெளியாக உள்ள இந்த பாடலை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இதை அதிகாரப்பூர்வமாக இயக்குனர் தயாரிப்பு நிறுவனம், லோகேஷ் கனகராஜ், அனிருத் என பலரும் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com