‘பஜ்ரங்பலி’ போஸ்டருடன் ஹனுமன் ஜெயந்தி! ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர்! கொண்டாட்டம்!

‘பஜ்ரங்பலி’ போஸ்டருடன் ஹனுமன் ஜெயந்தி! ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர்! கொண்டாட்டம்!

மார்ச் 6, வியாழன் அன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, வரவிருக்கும் புராண இதிகாச திரைப்படமான ‘ஆதிபுருஷ்’ ன் தயாரிப்பாளரும், இயக்குனரும் இணைந்து ’பஜ்ரங்பலி’ எனும் பெயரில் நடிகர் தேவதத்தா நாகே, பகவான் ஹனுமானாக இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில் ஹனுமன்  ஒரு பாறையின் மீது தியானத்தில் அமர்ந்திருக்க அவருக்கு அருகே அவரது கதாயுதம் வீற்றிருக்கிறது. பின்னணியில் ஹனுமனின் அத்யந்த தெய்வமான ராமபிரானின் முகம் பக்கவாட்டுத் தோற்றத்தில் பிரமாண்டமாக வானில் தெரிகிறது. இது தான் அந்த போஸ்டர். ஸ்ரீராமனாக பிரபாஸும், ஹனுமனாக தேவதத்தா நாகேவும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இயக்குனர் ஓம் ராவத், “ராம் கே பக்த் அவுர் ராம்கதா கே பிரான்... ஜெய் பவன்புத்ரா ஹனுமான்!” என்று பதிவிட்டிருந்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் போஸ்டர்கள் பகிரப்பட்டன. ஆதிபுருஷ் ஒரு பான்-இந்தியா திரைப்படம் என்று கூறப்படுகிறது. மேலும் பார்வையாளர்களை ஈர்க்க பிரபாஸின் பான் இண்டியா அப்பீலையும் நம்பி அத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஆதிபுருஷில் கிருத்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் லங்கேஷ்வர் ராவணனாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். படம் முதலில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் டீசரில் காட்டப்பட்ட காட்சி விளைவுகளை ரசிகர்கள் விமர்சித்ததை அடுத்து வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அடுத்ததாக இத்திரைப்படம் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரசிகர்களின் விமர்சங்களை மனதில் கொண்டு அதற்கேற்ப படத்தை மாற்றுவதற்கு அதிக நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்வது முக்கியம் என படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜீ மராத்தி சீரியலான ஜெய் மல்ஹரின் நட்சத்திரமாக நாகே அறியப்படுகிறார். தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய பிறகு ஓம் ராவத் இந்தியா முழுதும் புகழ் பெற்றார். அத்திரைப்படத்தில் படத்தின் சவுண்டுஸ்டேஜ்கள் பச்சை திரைகளைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டன. அதே உத்தியை ஓம் ராவத் ஆதிபுருஷிலும் பயன்படுத்தி இருப்பதாகத் தகவல்.

இந்தப் படம் பிரபாஸின் எதிர்காலத்துக்கு மிக முக்கியமானது. ஏனெனில், பாகுபலி: தி பிகினிங் மற்றும் பாகுபலி 2: தி கன்க்ளூசன் ஆகிய 2 பிளாக்பஸ்டர் ஹிட்களுக்குப் பின் பான் இண்டியன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பிரபாஸால் தனது அடுத்த இரண்டு திரைப்படங்களான சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் மூலம் அதே வெற்றியைப் பிரதிபலிக்க முடியவில்லை.

ஆதிபுருஷ் படத்திற்கு பிறகு கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படமான  “சலார்” ல் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார் என்பது முன்பே தெரிந்த செய்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com