நான் புரட்சி தளபதி அல்ல - நடிகர் விஷால் பேச்சு!

நான் புரட்சி தளபதி அல்ல - நடிகர் விஷால் பேச்சு!

பொதுவாகவே திருட்டு வீடியோவை பிடிக்காது இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது இறங்கி அடிப்பேன் என்கிறார் நடிகர் விஷால். விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘லத்தி’. வரும் 22ம் தேதி உலகமெங்கும் இந்தப் படம் வெளியாகிறது.

ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லத்தி படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

vishal
vishal

அவ்விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது:

“ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து, புரட்சித் தளபதி வாழ்க என்று சொல்ல வேண்டாம். நான் தளபதி அல்ல; புரட்சி தளபதியும் அல்ல... என் பெயர் விஷால். அவ்வளவுதான்!

லத்தி திரைப்படம் நான்கு மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் செலவு. அந்தப் பணத்தில் இரண்டு குழுந்தைகளின் படிப்புச் செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன்.

லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜயிடம் கதை சொல்லி இயக்குவேன்.

வினோத் 8 நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், கதை கூறும் முன்பு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்றார். சொல்லுங்கள் என்றேன், நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா என்றார். அதெல்லாம் சரி நீங்கள் முதலில் கதையைக் கூறுங்கள் என்றேன். கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதைப் பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

படப்பிடிப்பில் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.

இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் கேட்ட விஷயங்களைச் செய்து தர முடியுமா? என்று சந்தேகப்பட்ட விஷயங்களை சுலபமாகச் செய்து கொடுத்த கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.

ஒரு தயாரிப்பாளர் இறங்கி வேலை செய்தால் அதைவிட சௌகரியான விஷயம் நடிகருக்கு அமையாது. அப்படி ஒரு தயாரிப்பாளர்களாக ரமணாவும், நந்தாவும் இருந்தார்கள். ஒரு படத்திற்கு இந்தளவிற்குத்தான் பட்ஜெட் என்று ஒதுக்கப்படும்.

ஆனால், இந்த விஷயங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களே கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு தயாரிப்பாளர்கள் இருந்தால், 4வது மாடியில் இல்லை, 8வது மாடியில் இருந்தும் கூட குதிக்கலாம்.

நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கிக் கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள், நன்றி!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com