மனவாடு ஆட்டம் ஆரம்பம்!

மனவாடு ஆட்டம் ஆரம்பம்!

சம்பூர் னேஷ் - தெலுங்கு சினிமாவில் ஆர்ப்பாட்டமான காமெடி ஹீரோ. சம்பூர் கிண்டல் செய்யாத தெலுங்கு ஹீரோக்களோ படங்களோ இல்லை என்று சொல்லலாம். இவர் காமெடிக்கு என்றே ஆந்திராவில் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவரை பர்னிங் ஸ்டார் என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இந்த மனவாடு தமிழில் என்ட்ரி தர உள்ளார்.

கோபி நாத் நாராயண மூர்த்தி என்பவர் இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்தை இயக்க உள்ளார். கோபி நாத் வங்கி மற்றும் ஐ டி செக்டரில் பணியாற்றியவர். மெழுந்த் ராவ் மற்றும் ஆர். கண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கோடீஸ்வர ராஜு மற்றும் இளஞ்செழியன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் சம்பூரையும் வரவேற்கும் என நம்புவோம்.

ஸ்பூப் (spoof) என்ற வகை திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலம். அதாவது ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதே போல ஒரு படம் எடுத்து கிண்டல் செய்வார்கள். இந்த வகை படங்கள் இந்தியாவில் கிடையாது. முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் spoof வகை படங்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

சம்பூர்னேஷ் தெலுங்கு படங்களையும் நடிகர்களையும் மட்டும் கிண்டல் செய்யவில்லை. ஹிந்தி படங்களையும் அமீர் கானையும் கிண்டல் செய்துள்ளார். சூர்யா நடித்த சிங்கம் படத்தை இமிடேட் செய்து சிங்கம் 123 என பெயரிட்டு நடித்து ஒட்டு மொத்த ஆந்திராவையும் சிரிக்க வைத்துள்ளார். இவரின் சண்டை காட்சிகள் செம காமெடியாக இருக்குமாம். சம்பூரின் ஒரிஜினல் பெயர் நரசிம்மாசாரி. இனி தமிழ் ரசிகர்களும் spoof படங்களை பார்க்க தயாராகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com