'பொன்னியின் செல்வன்' பிரபல நடிகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! அவர் யாருன்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருவதோடு, கவுதம் மேனனின் இயக்கத்தில் வெளியான 'நடுநிசி நாய்கள்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அஷ்வின் கக்குமானு.
இவர் 2011ல் அஜித் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படமான 'மங்காத்தா' திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து, 'பிரியாணி', 'மேகா', 'ஜீரோ', 'பொன்னியின் செல்வன் 1' உட்பட படங்களில் நடித்துள்ளார்.

'பொன்னியின் செல்வன் 1' படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் சிறப்பாக தனது பங்கை கொடுத்திருந்தார். இதையடுத்து, 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி உலகெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது.
அதேபோல், அவரது நடிப்பில் 'பீட்சா 3 தி மம்மி' திரைப்படமும் உருவாகி விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது.
இந்நிலையில், அஸ்வின் கக்குமானுவுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது.

இவர் சோனாலி என்பவைரை 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஏன்கெனவே அவிரா ரூபி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் நேற்று குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அஸ்வின் கக்குமானு தனது இன்ஸ்டா பக்கத்தில், 'நாங்கள், எங்கள் மகனை இந்த உலகத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் வரவேற்றோம். தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள் என்று பதிவிட்டு, குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.