அஜித் ஜோடியாக சாய்பல்லவியா?

அஜித் ஜோடியாக சாய்பல்லவியா?

சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ்சிவன். அடுத்து விஜய்சேதுபதியை வைத்து அவர் இயக்கிய நானும் ரவுடி தான் படம்மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்தகூட்டம் படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு மீண்டும் விஜய்சேதுபதி உடன்இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன்அடுத்ததாக நடிகர் அஜித்தின் ஏகே 62 என்கிற படத்தை இயக்க உள்ளார்.

ஏகே 62 படத்தில், முக்கிய வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாககூறப்படுகிறது. காமெடி மற்றும் திரில்லர் கதைய அம்சம் கொண்ட இந்த படத்தில்இரு அழகிய நடிகர்களும் எதிர் - எதிர் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படிஇருக்கும்? என நினைக்கும் போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறுகிறதுஅல்லவா? அதே போல் நடிகர் சந்தானம் நீண்ட இடைவெளிக்கு பின்னர்அஜித்துடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் எனகூறப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத் AK 62 படத்திற்கு இசையமைக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'காத்து வாக்குல ரெண்டுகாதல்' படத்தில் அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும்மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கஉள்ள ஏகே 62 படத்திலும், அனிருத் இசை அமைக்க உள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள ஏகே62 படத்தில் தற்போது சாய் பல்லவி நடிக்க போவதாக செய்திகள் வருகின்றன. அஜித் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்தால் சூப்பராத்தான் இருக்கும் எனரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

துணிவு படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அஜித் நடிக்கப் போகும் ஏகே 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிஉள்ளது. சபரி மலைக்கு சென்ற போது கூட அஜித் படம் குறித்த கேள்விகள் தான்விக்னேஷ் சிவனிடம் எழுப்பப்பட்டது. ஆனால், சாமி சரணம் என சொல்லி விட்டு அப்டேட் கொடுக்காமல் விட்டார் விக்னேஷ் சிவன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com