குஷி பட ஓடிடி ரிலீஸ் எப்போ? தகவல் வெளியானது!

Kushi movie
Kushi movie

மந்தா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா ஒரு நோயால் பாதிக்கப்பட்டு பல நேர்காணலில் கண்கலங்கி பேசியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் படத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தனர். அந்த வகையில், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்த குஷி படம் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படத்தை சிவா நிர்வணா இயக்கியிருக்கிறார்.மெட்ராஸ், காலா, சர்பேட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிருதயம் படத்தின் இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் என்பவர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கேடகர், முரளி சர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. மகாநதி படத்திற்கு பிறகு நடிகை சமந்தா , விஜயதேவரகொண்டா ஜோடி தற்போது மீண்டு குஷி படத்தில் இணைந்துள்ளனது.

இந்நிலையில், குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com