சமுத்திரக்கனியின் 'தலைக்கூத்தல்'!

தலைக்கூத்தல்
தலைக்கூத்தல்

ஜெயபிரகாஷ் எழுதி இயக்கிய 'தலைக்கூத்தல்' திரைப்படத்தை சஷிகாந்தின் ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர். சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் முதியவர்களைக் கொலை செய்யும் (ஆணவக்கொலை ) பழக்கம் ஒன்று உள்ளது. பாரம்பரிய நடைமுறையான 'தலைக்கூத்தல்' பற்றி படம் பேசுகிறது. அதாவது வீட்டில் பாரமாக இருக்கும் முதியோர்களை ‘தலைக்கூத்தல்’ என்ற பெயரில் கொலை செய்கின்றனர். இந்த கொடுமையான சடங்கை சுட்டிக்காட்டும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

கண்ணன் நாராயணன் இசையமைக்க மார்ட்டின் டோன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் எடிட்டராக டானி சார்லஸ் பணிபுரிந்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 3, 2023 அன்று திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com