பொன்னியின் செல்வன் நடிகையா இவர்?

sobitha
sobitha

பொன்னியின் செல்வன் திரைப் படத்தில் வானதியாய் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவரின் நிஜப் பெயர் சோபிதா துலிப்பாலா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் போது பிரபலம் ஆனதை விடத் தற்போது நாக சைதன்யாவின் பேட்டியைத் தொடர்ந்து அதிகளவில் பேமஸ் ஆகி இருக்கின்றார் சோபிதா.

சோபிதா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் த்ரிஷாவின் நெருங்கிய தோழியாக நடித்திருந்தார். இவரும் த்ரிஷாவும் சேர்ந்து நடித்திருந்த சொல் பாடலும் , ராட்சச மாமனே பாடலும் ரசிகர்களை கவர்ந்தது. இதில் த்ரிஷாவும் சோபிதாவும் அழகு பதுமைகளாக வலம் வருவார்கள்.

sobitha
sobitha

தற்போது இவர் பல படங்களிலும் கமிட்டாகி ரொம்ப பிஸியாக நடித்துவருகின்றார். இவருக்கு தமிழ் கொஞ்சம் கூடத் தெரியாது. பொன்னியின் செல்வன் டப்பிங் கூட இவருக்கு ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் கொடுத்திருக்கின்றார்கள். இதனைத்தொடர்ந்தும் இவருக்குப் பல பட வாய்ப்புக்களும் வந்து குவிந்த வண்ணமேஇருக்கின்றன

இவர் மே 31 இல் 1990 இல் பிறந்தவர். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். சோபிதா சின்ன வயது முதலே ரொம்ப நன்றாகப் படிக்கக் கூடியவர். இவருக்கு 16 வயது இருக்கும் பொது மும்பைக்கு சென்று குடியேறத் தொடங்கினார்கள்.

அங்கு இவர் தனது கல்லூரிப் படிப்பை படித்தார். அதாவது இவர் பொருளியல் துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறந்தும் விளங்கினார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் குறிப்பாக 2013 இல் தனது நண்பர் ஒருவரின் மூலமாக பியூட்டி கான்டெஸ்ட் ஒன்றில் கலந்து கொண்டார்.

மேலும் இவர் பெமினா மிஸ் இந்தியா,பெமினா மிஸ் இந்தியா ஏர்த் எனப் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். அத்தோடு மிஸ் பியூட்டி, மிஸ் கான்பிடெண்ட் போன்ற பல சப் டைட்டில்களையும் வென்றிருக்கின்றார்.

சோபிதா துலிப்பாலா தற்போது நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com