Sun Nxt OTT தளத்தில் வெளியாகிறது விஜய் நடித்த வாரிசு!

Sun Nxt OTT தளத்தில் வெளியாகிறது விஜய் நடித்த வாரிசு!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘வாரிசு’ திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றது. வாரிசு திரைப்படம் விமர்சகர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் நல்ல பெயரை பெற்றுள்ளதோடு வசூலில் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டு வருகிறது.

உலக அளவில் இந்தத் திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், வெற்றிகரமாக இந்தத் திரைப்படம் ஐந்தாவது வாரத்தில் நுழைந்திருக்கிறது. இந்தநிலையில், ’வாரிசு’ படத்துடன் வெளியான ‘துணிவு’ திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், ‘வாரிசு’ இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வாரிசு படம் ஆரம்பித்து ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி படக்குழுவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், பிற மொழி படங்களுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் குறைந்த அளவிலான திரையரங்குகளே ஒதுக்க வேண்டுமென தில்ராஜு ஏற்கனவே பேசியது அவருக்கு எதிராகவே திரும்பியது. அவரது பேச்சுப்படி, வாரிசு படத்துக்கு குறைந்த அளவிலான திரையரங்குகளே ஒதுக்கப்படும் என ஆந்திராவின் முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் உலக அளவில் இந்தத் திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

’வாரிசு’ இந்த மாதம் 22-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடித்த'வாரிசு' திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளை அதிரவைத்த 'வாரிசு' தற்போது OTT-ல் களமிறங்க தயாராகியுள்ளது.

இப்படம் தற்போது Sun Nxt OTT தளத்தில் வருகிற பிப்ரவரி 22-ம் தேதி முதல்வெளிவருகிறது என்னும் exclusive தகவல் கசிந்துள்ளது.

திரையில் கொண்டாடிய வாரிசை உலகமெங்கும் உள்ள தளபதி ரசிகர்கள் Sun Nxt தளத்திலும் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் என்னும் செய்தி தளபதிரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com