'தளபதி 67' வில்லன் இவர் இல்லையாம்! பூஜையில் பங்கேற்ற பிரபல ஆக்ஷன் ஹீரோ!

'தளபதி 67' வில்லன் இவர் இல்லையாம்! பூஜையில் பங்கேற்ற பிரபல ஆக்ஷன் ஹீரோ!

'மாஸ்டர்' பெரும் வெற்றியைத் தொடர்ந்து, தளபதி விஜய், லோகேஷுடன் கூட்டணி அமைக்கும் திரைப்படம்தான் 'தளபதி 67'. இப்படம் லோகேஷ் கனகராஜின் 5வது படமாகும். இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கவிருப்பதாக தகவல் அறியவருகிறது.

லாேகேஷின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படம் மாபெரும் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த படம் தளபதி விஜய்யுடன் என்றதும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஷாலும் நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் அவர் நடிக்கவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் அறியப்படுகிறது.

இந்நிலையில், தற்போது 'தளபதி 67' படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இவ்விழாவில் அர்ஜுன் கலந்துகொண்டுள்ளார். மேலும் திரிஷா, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோரும் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியின் மூலம் 'தளபதி 67' படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பது உறுதியாகியுள்ளது தெரியவருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com