'தளபதி 68' அப்டேட் : விஜய்க்கு ஜோடி இந்த நடிகைதான்...

'தளபதி 68' அப்டேட் : விஜய்க்கு ஜோடி இந்த நடிகைதான்...
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சாக நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, விஜய் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானதோடு, இப்படத்திற்கான பட்ஜெட் ரூ.400 கோடி எனவும் கூறப்பட்டது.

இருந்தாலும் இப்படம் குறித்த அறிவிப்புகள், அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதன்படி, ஹெச்.வினோத் தளபதி விஜய்க்கு ஒரு கதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் விஜய்யின் அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் ஹெச்.வினோத், 'தல' அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கி, மூன்றுமே ஹிட்டாகியும், இதுவரை 'தளபதி' விஜய்யை வைத்து படம் இயக்காத நிலையில், தற்போது விஜய்க்கு கதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் 'தளபதி 68' படத்தை அட்லி, ஹெச்.வினோத் இருவரில் யார் இயக்கப்போகிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், விஜய்யின் அடுத்த படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தாதான் விஜய்யின் அடுத்த பட நாயகி என்ற முடிவை விஜய் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா ஏற்கெனவே நடிகர் விஜய்யுடன் 'கத்தி', 'தெறி', 'மெர்சல்' உட்பட படங்களில் நடித்துள்ளார்.

ஒருவேளை இதுமட்டும் நடந்தால், இந்த படம் சமந்தாவுக்கு விஜய்யுடன் இணைந்து நடிக்கும் 4வது படமாக அமையும்.

logo
Kalki Online
kalkionline.com