தளபதி விஜயின் லியோ அப்டேட்ஸ்!

தளபதி விஜயின் லியோ அப்டேட்ஸ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் லியோ திரைப்படத்திற்கான படபிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட படக் குழுவினர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அறிவிப்பு வரும் முன்பேஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

மிகப் பெரிய பட்டாளம் கொண்ட இப்படக்குழு வியாபாரத்தில் 1000 கோடியை எட்டும் நோக்கில் இருக்கிறது. தேவையான அனைத்து அப்டேட்களையும் ரசிகர்கள் பெரிதும் எங்கிய புரோமோ வீடியோவையும் படக்குழு கொடுத்துவிட்டு தற்போது தீவிரமான ஷூட்டிங்கில் மூழ்கியுள்ளது. சென்னையில் முதற் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு கஷ்மீரில் பணிகளை தொடர்ந்து வருகிறது. அவ்வபோது இடையிடையே அப்டேட்களும் ரசிகர்களுக்கு வந்தடைகிறது.

ஏற்கனவே அக்டோபர் 19 ஆம் தேதி, ஆயுத பூஜை விடுமுறையை லியோ புக் செய்து விட்டது. 4/5 நாட்கள் விடுமுறை என்பதால் நல்ல லாபத்தை விரைவில் ஈட்டி விடலாம். அதற்காக தான் விரைந்து விரைந்து பணிபுரிந்து வருகின்றனர். லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் சரியாக இன்னும் 90 நாட்களுக்குள் ஒட்டுமொத்த ஷூட்டிங் வேலைகளையும் முடித்து போஸ்ட் புரொடக்ஷனில் நுழைய திட்டமிட்டுள்ளனராம்.

ஜூன் முதல் வாரத்திற்குள் லியோ படத்தின் ஷூட்டிங் முடிவு. அதற்க்கு அடுத்த 20 நாட்களில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒரு மெகாஅப்டேட். பின்னர் 2 மாதங்கள் எடிட்டிங், டப்பிங் என போஸ்ட் புரொடக்ஷன்தீவிரமாக இருக்கும். கடைசி 2 மாதங்களில் எப்போதும் இல்லாத அளவிலானபுரொமோஷன் எதிர்பார்க்கப்படுகிறது. படம் பேன் இந்தியா படம் என்பதால் விக்ரம்படத்திற்கு கிடைத்த விளம்பரம் இப்படத்திற்கும் கிடைத்ததால் 1000 கோடிநிச்சயம்.

தற்பொழுது காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தின் உடையபடப்பிடிப்பில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் காஷ்மீருக்குவந்திருக்கிறார். காஷ்மீருக்கு வந்த சஞ்சய் தத்தை தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் அவரை வரவேற்கும் காட்சியை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்தக் காட்சியில் தளபதி விஜய் வியோ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தோற்றத்தை காட்சியில் காண முடிகிறது. அந்த தோற்றம் இதுவரை தளபதி விஜய் நடிக்காத புதுமையான தோற்றமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com