நோயின் அவஸ்தையும் கைமாறும் பட வாய்ப்பும்! அந்த வாய்ப்பு யாருக்கு போனது தெரியுமா?

நோயின் அவஸ்தையும் கைமாறும் பட வாய்ப்பும்! அந்த வாய்ப்பு யாருக்கு போனது தெரியுமா?

கோலிவுட்டில் 2010ல் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் கேமியோ ரோலில் நடித்து அறிமுகமானவர் சமந்தா. அதைத் தொடர்ந்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி ஆரம்பித்து, நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், 24 தெறி, மெர்சல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் சமந்தா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா நடித்திருந்தாலும், இன்றளவும் நடிகை நயன்தாராவுக்கு இணையாக கோலிவுட்டில் அவருக்கென தனி அடையாளத்துடன் வலம் வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, Myositis எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு தனக்கு இருப்பதாகவும், அதனால் தான் அவதிப்பட்டு வருவதாகவும், அதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இச்செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்களும், பல பிரபலங்களும் சமந்தாவுக்கு தங்களுடைய ஆறுதலை கூறியிருந்தனர்.

இதற்கிடையே, அவர் நடிப்பில் 'யசோதா' திரைப்படம் உருவாகி அதற்கான ப்ரமோஷன் வேலைகளும் நடைபெற்றன. சமந்தா சிகிச்சையில் இருந்தாலும், பட ப்ரமோஷன் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது உடல் இழைத்து சற்று சோர்வாகவும் காணப்பட்டார்.

தற்போது 'யசோதா' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் அள்ளிக் குவித்து வருகிறது.

நோயின் அவஸ்தை பற்றியும், அதற்காக தான் சிகிச்சை எடுத்து வருபது பற்றியும் சமீபத்தில் சமந்தா மனம் திறந்து பேசியிருந்த நிலையில், அவரால் அடுத்தடுத்து வரும் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலையில், தற்போது ஒரு மிகப்பெரிய வாய்ப்பையும் இழந்துள்ளார்.

தெலுங்கில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் இவர் ஆடிய 'ஓ சொல்றியா மாமா' பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி அனைவராலும் கவரப்பட்டது.

தற்போது இப்படத்தின் 2ம் பாகம் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதல் பாகம் போன்று 2ம் பாகத்திலும் ஒரு ஐட்டம் டான்ஸ் வைக்கலாம் என்று படக்குழு முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் தனது உடல் நிலை காரணமாக தன்னால் ஆட முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

சமந்தாவின் இந்த பதிலால், படக்குழு நடிகை காஜல் அகர்வாலை அணுகியதாம். காஜலுக்கு 2020ல் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கின்ற நிலையில் சினிமாவுக்குள் நுழையாமல் ஒதுங்கி இருந்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் திரையுலகில் வந்து 'புஷ்பா' படத்தில் ஸ்பெஷல் டான்ஸ் ஆடுவாரா என்பது பின்னர்தான் தெரியவரும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com