காத்துவாக்குல இரண்டு காதல்: ரியல் அல்லது ரீல்?!

காத்துவாக்குல இரண்டு காதல்: ரியல் அல்லது ரீல்?!

-ராகவ் குமார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'காத்துவாக்குல இரண்டு காதல்' படம் ரிலீசாகி விட்டது. நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடித்து, பெரிய அளவில் பேசப்பட்ட இந்த படத்திற்கு ''சுமார், பரவாயில்லை'' என்பது போன்ற விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.                  

இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க.. இந்த படம் வெளியானதைத் தொடர்ந்து, ரியல் காதலர்களான விக்னேஷ் சிவனும் நயனும் பிரிய போகிறார்கள் என்ற தகவல் காத்துவாக்கில் கசிந்து கொண்டு இருக்கிறது.

ஆம்..  இந்த பிரிவுக்கு காரணமே – 'காத்து வாக்குல இரண்டு காதல்' படத்தின் கதையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரையும் விஜய் சேதுபதி காதலிக்கிறார். அதில் அவர் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பது சொச்ச கதை! 

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபுதேவாநயன்தாரா காதலும்,அதனால் பிரபுதேவாவிற்கும் அவரது மனைவி ரமலத்திற்கும் பிரச்சனை என்று மீடியாவில் பேசப்பட்டது.இந்த படத்தில் விஜய் சேதுபதி கேரக்டர் பரபு தேவாவையும், நயன்தாரா கேரக்டர் பிரபுதேவா மனைவி ரமலதையும், சமந்தா கேரக்டர் பிரபுதேவா வாழ்கையில் சூறாவளியாக புகுந்த நயன்தாராவையும் மையப்படுத்தி டைரக்டர் எழுதி விட்டார் என்று கருதப்படுகிறது.

நயன்தாராவும் அப்படியே கருதிவிட்டார் என்றும் இதுதான் பிரிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் படப்பிடிப்பின் போது சமந்தாவிடம் விக்னேஷ் சிவன் காட்டிய நெருக்கமும் பிரிவுக்கு ஒரு காரணமாம்

எது எப்படியோ.. கருத்து வேற்றுமை எல்லாம் சரியாகி, விக்னேஷும் நயன்தாராவும் நிஜ வாழ்க்கையில் இணிய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com