இசையமைப்பாளர் அனிருத்தை கடத்த திட்டமிடும் விஜய் தேவரகொண்டா!

இசையமைப்பாளர் அனிருத்தை கடத்த திட்டமிடும் விஜய் தேவரகொண்டா!

தனிப்பட்ட வாழ்க்கையில் மனக்கசப்பு,   உடல் நிலை பிரச்சனை போன்ற பல தடைகளில் இருந்து மீண்ட சமந்தா தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு விஜய் தேவரகொண்டா மட்டுமே வந்திருந்தார். அப்போது பேசிய அவர், "நடிகை சமந்தா அவர்கள் அற்புதமான, திறமையான நடிகை. நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த  போது சினிமாவில் சிறு பெண்ணாக அறிமுகம் ஆனார்.

நான் படிக்கும் காலத்தில் இருந்து சமந்தாவின் நடிப்பை ரசித்து வருகிறேன். அவருடன் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். சமந்தா எங்கு பேசினாலும் நான் பல்லாவரம் பொண்ணு என்பார். உங்கள் பல்லவாரம் பெண்ணிற்கு கொஞ்சம் ஓய்வு தேவை. அதனால் தான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை.         உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு தர அமெரிக்கா சென்றுள்ளார் என்றார்.

மேலும், விஜய் தேவரகொண்ட தனது குறித்து பேசிய அவர், திருமணத்தை பற்றி பலர் என்னிடம் கேட்கிறார்கள்.நான் கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்து கொள்வேன்.  ஆனால் ஆர்ப்பாட்டமாக செய்து கொள்ளமாட்டேன்.தமிழ் நாட்டில் அனிருத் திறமையை பார்த்து வியக்கிறேன். விட்டால் அனிருத்தை கடத்திக்கொண்டு போய் என் படத்திற்கு பயன் படுத்திக்கொள்வேன்" என்றார்.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com