விஜயின் ‘வாரிசு‘ வெளியீடு தள்ளிவைப்பு - தில் ராஜு விளக்கம்!

விஜயின் ‘வாரிசு‘ வெளியீடு தள்ளிவைப்பு - தில் ராஜு விளக்கம்!

விஜய் நடிப்பில், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபைலி எழுதி இயக்கி வெளிவரவிருக்கும் தமிழ் படம் வாரிசு. பிரகாஷ் ராஜ், குஷ்பு, சரத்குமார், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை தமன்.

இந்தப் படம் தெலுங்கில் ‘வாரிசுடு’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. தெலுங்கில் இப்படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அங்கு படமாக்கப்பட்டுவந்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு விளக்கமளித்த தயாரிப்பாளர் தில் ராஜு வாரிசு ‘தமிழ்’ படம் என்றார்.

தமிழில் ‘வாரிசு‘ படத்துக்கு போட்டியாக நடிகர் அஜித்தின் ‘துணிவு‘ படமும் 11ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது. இதற்கிடையே தமிழ்நாடு அளவில் வாரிசு மற்றும் துணிவு படங்களின் முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது.

மேலும் துணிவு படமும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.

தமிழில் 11 ஆம் தேதியே வெளியாகும் வாரிசு படம் தெலுங்கில் 14 ஆம் தேதிதான் வெளியாகிறதாம். தெலுங்கில் வாரிசு படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதற்கு காரணம், அங்கு பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படம் 12 ஆம் தேதியும், சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படம் 13 ஆம் தேதியும் வெளியாகிறது. இதனால் விஜயின் வாரிசு படத்திற்கு தேவைப்படும் அதிகபடியான திரையரங்கம் கிடைக்கவில்லை.

மேலும் இங்கு நேரடி தெலுங்கு படத்திற்குதான் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று சிலர் ஏற்கெனவே கோரிக்கை வைத்ததும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘வாரிசுடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, ரசிகர்கள் தெலுங்கு ஹீரோக்கள் படங்களான வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி படங்களைதான் முதலில் பார்க்க வேண்டும். அதைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் ‘வாரிசுடு’ படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. இதில் வேறு எந்த பிரச்னையும் இல்லை. என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com