லத்தி - நீளம் கொஞ்சம் ஜாஸ்தி!

திரை விமர்சனம்!
Laththi
Laththi

விஷால் இதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.லத்தி படத்தில் ஹீரோக்கள் ஏற்று நடிக்க தயங்கும் கான்ஸ்ட பிள் கேரக்டரில் நடித்துள்ளார். இதற்காகவே விஷாலை பாராட்டலாம். லத்தியை இயக்கி உள்ளார் வினோத் குமார்.

ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள்.ஒரு பிரச்சனையில் சஸ்பென்ட் செய்யபட்டிருக்கும் கான்ஸ்டபிள் முருகானந்தம் (விஷால் ) மேல் அதிகாரி ஒருவரின் சிபாரிசில் மீண்டும் வேலைக்கு சேர்க்கிறார்.

Laththi
Laththi

அந்த அதிகாரியின் மகளை ஒரு பிரபல தாதாவின் மகன் வெள்ளை (ரமணா ) மிக அருவருக்க தக்க வகையில் அவமானம் செய்கிறார்.இதற்காக வெள்ளைக்கு பாடம் புகட்ட எண்ணி முருகானந்தம் உதவியை நாடுகிறார். முருகனும் வெள்ளை தனது முகத்தை தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக வெள்ளை முகத்தில் ஒரு பிளாஸ்டிக் கவரை மாட்டி வெள்ளையை லத்தியால் அடித்து வெளுக்கிறார். தன்னை அடித்த போலீஸ்காரர் யார் என்பதை அறிய தேடுகிறார். ஒரு கட்டத்தில் முருகானந்தம் என்பதை கண்டு பிடிக்கிறார்.

அதன் பின்பு நடப்பதை மிக பெரிய ஆக்ஷன் காட்சிகளில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக சென்றாலும் அடுத்தடுத்து வேகமாக நகர்கிறது. டைரக்டர் திரைக்கதையில் வேறு எதையும் தேவையில்லாமல் செய்யாமல்,படத்தை ஒரு நேர்கோட்டில் கொண்டு சென்றுள்ளார்.இதுவே படத்திற்கு மிக பெரிய வெற்றிதான்.பாலசுப்பிரமணியெம் மற்றும் பாலகிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகள் பிரம்மாண்டமாக உள்ளது. யுவனின் இசை இதனுடன் கை கோர்க்கிறது.

ஒரு சிறிய இடைவெளிக்கு பின்பு விஷால் ஆக்ஷன் மற்றும் ஆக்ட்டிங்கில் நன்றாக பொருந்தி போகிறார். ஒரு இளம் வயது கான்ஸ்டபிளின் உடல் மொழியை உள்வாங்கி நடித்திருக்கிறார்.சுனைனா சொல்லி தந்த படி நடித்துள்ளார். ஹாண்ட் சம் ரமணா தனது அழகை குறைத்து கொண்டு நாம் நினைத்து பார்க்க முடியாத வில்லத்தனத்தை காட்டியுள்ளார்.

எத்தனை முறை அடித்தாலும், சுட்டாலும், குத்தினாலும் மீண்டும் எழுந்து வரும் ஹீரோ போன்ற லாஜிக் மீறல்கள் இந்த படத்தில் இருக்கிறது. இதை தாண்டி லத்தியை ரசிக்க முடிகிறது. லத்தி -நீளம் கொஞ்சம் ஜாஸ்தி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com