யசோதா பட ப்ரொமோஷன்! ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த சமந்தா!

யசோதா பட ப்ரொமோஷன்! ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த சமந்தா!

விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. 2017ல் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் கொண்டார். பின் 4 வருட திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்படவே இருவரும் பிரிந்தனர்.

இருந்தும், படங்களில் நடித்து வந்த சமந்தா, சமீபத்தில் மயோசிடிஸ் என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நோய் தாக்கி, அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இந்நோய் குறித்து புகைப்படத்துடன் சமூகவலைதளங்களில் வெளியிட்டு, இதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் வெளிப்படையாக அவர் தெரிவித்திருந்தது அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்தது.

இந்நோய் குறித்தும் சமூகவலைதளங்களிலும் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'யசோதா' திரைப்படம் நவம்பர் 11ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இத்திரைப்படம் விரைவில் வெளியாகவிருப்பதால், அப்படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளும் மும்முரமாக நடந்துவருகிறது. இந்நிலையில், மயோசிடிஸ் நோயில் இருந்து முழுதும் குணமடையாத நிலையிலும், சமந்தா 'யசோதா' படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட கிளம்பிவிட்டார். அந்த சமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா தனது சமூகவலைதள பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்ததோடு, அதற்குள் இப்படி உடல் இளைத்து எலும்பும் தோலுமாக ஆகிவிட்டீர்களே... உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும், ஒருசிலர் முடியாத நிலையிலும்கூட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்ததை பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது எனவும் பலவாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com