தினபலன்
கடகம் - 03-03-2023
இன்று எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும்.
புனர்பூசம் 4ம் பாதம்: எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம்.
பூசம்: அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்கும்.
ஆயில்யம்: உயர்பதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7