துலாம் - 09-03-2023
இன்று எதிலும் நிதானம் தேவை. மாணவர்கள் சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். ஸ்வாதி:இன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9