கன்னி - 03-04-2023

கன்னி - 03-04-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். பேச்சிலும், செயலிலும் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: தேவைகள் பூர்த்தியாகும்.
ஹஸ்தம்: மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

logo
Kalki Online
kalkionline.com