தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்: அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்: அரசு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் இன்று அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

தமிழகத்தில் பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். மேலும் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும். மேலும் தமிழக பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.

-இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com