அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பூட்டு!

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பூட்டு!

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் இன்று மிகவும் பரபரப்பாக நடக்கவுள்ள நிலையில், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றார்.

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இன்று தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், ஈபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அதில் கலந்துகொள்ள எதிர்கட்சி தலைவரான பழனிசாமி புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் வீட்டில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் தனது பிரசார வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்தில் பதட்டம் நிலவுவதால், பூட்டு போடப்பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com