விகரம் படத்தில் சர்ச்சைக்குரிய பாடல்: நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்! 

விகரம் படத்தில் சர்ச்சைக்குரிய பாடல்: நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்! 

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் முதல் பாடல் வெளியீடு நேற்று வெளியானநிலையில், அந்த பாடலில் மத்திய அரசை விமரிசித்து சில வரிகள் இடம்பெற்றிருந்தது. கமல்ஹாசன் அந்த பாடலை தானே எழுதி பாடியிருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள "பத்தலே பத்தலே" பாடல் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்த பாடலின் வரிகள் மத்திய அரசை விமரிசிப்பதாகவும், சாதிப் பிரச்சனைகளை தூண்டும் வகையிலும் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் சமூக ஆர்வலர் செல்வம் குறிப்பிட்டதாவது:

நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தில் எழுதிப் பாடியுள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பாடலை எழுதிய மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் 'விக்ரம்' படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும்.

-இவ்வாறு அவர் தன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com