மெட்டி ஒலி சீரியலின் 2ம் பாகம்… இயக்குநர் யார் தெரியுமா?

Metti Oli serial
Metti Oli serial
Updated on

ஒரு காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்த்தத் தொடராக மெட்டி ஒலி இருந்தது. அந்தவகையில், மெட்டி ஒலி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் மிகவும் பிரபலமாக ஓடின. அதில் ஒன்றுதான் மெட்டி ஒலி. 2002ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த தொடர், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடராகும். இந்த தொடர் ஒளிபரப்பும் நேரம் வந்துவிட்டால், வரிசையாக அனைவர் வீட்டிலும் இதுவே ஓடும்.

5 சகோதரிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்தத் தொடரை திருமுருகன் இயக்கினார். இந்தத் தொடர் முடிந்தவுடன் மீண்டும் மறு ஒளிபரப்பும் செய்தனர். இந்த தொடரின் இன்ட்ரோ பாடலான அம்மி அம்மி அம்மி மிதித்து, அருந்ததி முகம் பார்த்து பாடல் மிகவும் ஹிட்டானது. சமீபத்தில்கூட இந்த பாட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இதற்கு பலரும் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். ஆகையால், இந்த சீரியல் மீண்டும் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டதோடு, 2k கிட்ஸுக்கும் இந்த தொடர் ஒரு காலத்தில் பிரபலமாக ஓடியது தெரியவந்தது.

ஏற்கனவே இரண்டு வருடங்களாக இந்த சீரியலின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்ற பேச்சுகள் எழுந்தன. இந்தநிலையில், சமூக வலைதளங்களில் ட்ரெண்டான பிறகு இப்போது முழு மூச்சுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
எனது அம்மாவின் மேல் ஒரு மூட்டைப் பணத்தை கொட்டினேன் – நடிகர் லிவிங்ஸ்டன்!
Metti Oli serial

ஆகையால், மெட்டி ஒலி பாகம் 2 விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், இந்த தொடரை திருமுருகன் இயக்கவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன. அவருக்கு பதிலாக, அவருடன் மெட்டி ஒலி பாகம் 1ல் துணை இயக்குநராக பணியாற்றிய ஒருவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல்தான் சித்தி முதல் பாகம் பெரிய அளவு ஹிட்டானது. இதனையடுத்து சில வருடங்கள் கழித்து சித்தி 2ம் பாகம் ஒளிபரப்பானது. இந்தத் தொடரும் பழைய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், 2k கிட்ஸ் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com