எனது அம்மாவின் மேல் ஒரு மூட்டைப் பணத்தை கொட்டினேன் – நடிகர் லிவிங்ஸ்டன்!

Livingstone
Livingstone
Published on

நடிகர் லிவிங்ஸ்டன் தனது முதல் சம்பளத்தை மூட்டையில் கட்டி வீட்டுக்கு கொண்டு சென்று தனது அம்மாவின் தலையில் கொட்டிய சம்பவம் குறித்துப் பார்ப்போம்.

80ஸ் காலத்தில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் லிவிங்க்ஸ்டன். இவர் 1988ம் ஆண்டு பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவரை இப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது விஜயகாந்த். லிவிங்ஸ்டனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக கதை சொல்ல விஜயகாந்திடம் சென்றார். அப்போதுதான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த லிவிங்ஸ்டன் சுந்தர புருஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பிறகு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தாலும், அடுத்தடுத்து வெற்றி பெற முடியாமல் தவித்த லிவிங்ஸ்டன் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வெள்ளி திரையைத் தொடர்ந்து சின்ன திரையிலும் களமிறங்கினார் லிவிங்ஸ்டன். சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கேரக்டரில் லிவிங்ஸ்டன் நடித்தார். அந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தற்போது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
Baakiyalakshmi update: ராமமூர்த்தியின் கடிதம்... கண்ணீரில் பாக்கியலட்சுமி குடும்பம்!
Livingstone

சமீபத்தில்கூட My perfect husband என்ற வெப் சீரிஸில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஜோவிகா சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் கதாநாயகியாக ஜோவிகா நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் லிவிங்ஸ்டன் ஒருமுறை தனது முதல் சம்பளம் குறித்த விஷயத்தைப் பகிர்ந்திருந்தார். அதுகுறித்து நாம் பார்ப்போம்.

“எனது முதல் படத்தின் சம்பளம் 5 லட்சம். அதனை நூறு ரூபாய் நோட்டுகளாக மாற்றி ஒரு மூட்டையில் கொட்டினேன். அதனை எடுத்துக்கொண்டு எனது அம்மாவிடம் சென்று அவர் மேல் மொத்த பணத்தையும் கொட்டினேன்.” என்று அந்த நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை நினைவுக்கூர்ந்தார்.      

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com