‘தண்டேல்’ உள்பட ஓ.டி.டி.யில் நாளை வெளியாகும் 4 படங்கள்

released ott march 7th 2025
released ott march 7th 2025
Published on

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் :

மீனாட்சி அம்மன் மூவிஸ் பேனரின் கீழ் அருண்குமார் சம்மந்தத்துடன் இணைந்து ஷங்கர் தயாள் இயக்கியுள்ள படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு, செந்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் சரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, கோவிந்த மூர்த்தி, சித்ரா லட்சுமணன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜெ.லக்‌ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, 'சாதக பறவைகள்' சங்கர் இசையமைத்துள்ளார்.

குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அரசியல் காமெடிவகைப் படமாக கடந்த 24-ந் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை (மார்ச் 7-ந்தேதி) முதல் ஆஹா தமிழ் மற்றும் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.

ரேகாசித்திரம் :

‘The Priest’ படத்தை இயக்கிய ஜோஃபின் டி சாக்கோ இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘ரேகாசித்திரம்’. ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் நடிகர் ஆசிஃப் அலி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அனஸ்வர ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ், ஜரின் ஷிஹாப், பாமா அருண், நிஷாந்த் சாகர், சித்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷமீர் முகமத் படத்தொகுப்பை மேற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியான இந்த படம் தற்போது வரை ரூ.90 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

இடுக்கியில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையின் வெளிப்பாட்டுடன் படம் தொடங்கி அந்த கொலைக்கும் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி போலீஸ் அதிகாரியான ஆசிஃப் அலி கண்டுபிடிப்பது போல் கதை சொல்லப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் நாளை (மார்ச் 7-ந் தேதி) முதல் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

தண்டேல் :

நாகசைதன்யா, சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள படம் 'தண்டேல்'. இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இன்று ஒடிடியில் வெளியான படங்கள்!
released ott march 7th 2025

சந்து மொண்டேட்டி இயக்கியுள்ள இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் தயாரித்துள்னர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வழக்கமான மீன்பிடி பயணத்தின் போது தற்செயலாக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு செல்லும் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஒரு மீனவரின் காதல், வீரம் மற்றும் தேசபக்தியை விவரிக்கும் ‘தண்டேல்’ படத்தின் கதைக்களம் உண்மையில் மிகவும் தனித்துவமானது. ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் பிப்ரவரி 7-ம்தேதி தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இதுவரை ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. நாளை முதல் (மார்ச் 7-ந்தேதி) நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் இப்படத்தை தமிழில் கண்டுகளிக்கலாம்.

நாடானியன் (Nadaaniyan) :

கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவான ‘நாடானியன்‘ திரைப்படத்தில் சயிப் அலிகானின் மகன் இப்ராகிம் அலி கான் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் மகளும், நடிகை ஜான்வி கபூரின் சகோதரியுமான குஷி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஷௌனா கெளதம் இயக்கியுள்ள 'நடானியன்' திரைப்படம் முதல் காதலின் மாயாஜாலம், பைத்தியக்காரத்தனம் மற்றும் அப்பாவித்தனத்தை ஆராயும் ஒரு இளம் வயது காதல் நாடகமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். நெட்பிளிக்சில் நேரடியாக வெளியாகும் இதனை நாளை முதல் (மார்ச் 7-ந்தேதி) தமிழில் காணலாம்.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
released ott march 7th 2025

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com