சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை சுயம்புலிங்கம் கடத்திய நிலையில், ஆனந்திக்கு தாலி கட்ட போவது யார்? என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது.
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை அன்பு மற்றும் மகேஷ் என இருவரும் காதலிக்கிறார்கள். இது தெரியாமல் ஒரு கட்டத்தில் அன்பு மீது ஆனந்திக்கு காதல் ஏற்படுகிறது. அது மகேஷிற்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து ஆனந்தி திடீரென்று கர்ப்பம் ஆனார். அதற்கு யார் காரணம் என்று அவருக்கே தெரியவில்லை என்பதுபோல் கதை நகர்ந்தது. இதனால், அன்புடன் எனக்கு திருமணம் நடக்கும் என்பதை மறந்து விடுங்கள் என ஆனந்தி அன்புவின் அம்மா லலிதாவிடம் சொல்லி இருந்தாள். ஆகையால், அன்புவின் அம்மா துளசியை உள்ளே கொண்டு வருகிறார். இப்படியே கதை நகர்ந்தது.
இப்படியான நிலையில், ஆனந்தியின் அக்கா கோகிலாவின் திருமண நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆனந்தியும் அன்புவும் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்கள். இதைப் பார்த்த மகேஷ் அங்கிருந்து வருத்தத்தோடு சென்றுவிடுகிறார். அவரை தொடர்ந்து துளசி மகேஷிடம் பேசுகிறார். நன்றாக உங்கள் வலியை மறைக்கிறார்கள் என்று துளசி கூற, நீயும்தான் மறைக்கிறாய் என்று மகேஷ் கூற நிகழ்ச்சி இப்படியே நகர்கிறது.
இப்படி இருக்கையில், காலையில் கோகிலாவின் திருமணம் நடைபெறவிருக்கும் சமயத்தில், இரவே கோகிலாவை சுயம்புலிங்கம் கடத்திவிடுகிறான். கோகிலாவை வைத்து அவர் ஆனந்தியை மிரட்டுகிறான். அதாவது நீ என்னை திருமணம் செய்துக்கொண்டால்தான், கோகிலாவுக்கு திருமணம் நடக்கும் என்று கூறுகிறார். உடனே ஆனந்தி சுயம்புலிங்கத்தை தேடி போகிறாள். எப்படியும் ரெஜினா மற்றும் சௌந்தர்யா மூலம் அன்பு இதை தெரிந்து கொள்வான். சுயம்பு லிங்கத்தை அடித்து துவம்சம் செய்து விட்டு ஆனந்தி கழுத்தில் அந்த இடத்திலேயே தாலி கட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது ரசிகர்களின் கணிப்பு. யாருக்கு தெரியும், அதை தடுக்க அங்கு மகேஷ் வந்தாலும் ஆச்சர்யத்திற்கு இல்லையே.