உலகின் மூன்றாவது பெரிய ஓடிடி என்ற சாதனையை படைத்திருக்கிறது ஒரு பிரபல ஓடிடி. சுமார் 200 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று சாதனையை படைத்திருக்கிறது.
அது ஜியோ ஹாட்ஸ்டார்தான். முதலில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டராக இருந்தபோது , அந்த ஓடிடி நெட்ஃப்லிக்ஸ் மற்றும் பிரைமுக்கு இணையான வரவேற்பை பெற்றது. ஆனால், டிஸ்னி நிறுவனம் தனது இந்திய சொத்துக்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு (RIL) விற்ற பிறகு, இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களின் இணைப்பு இறுதி செய்யப்பட்டது. இது ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னியின் கூட்டு முயற்சியாக இருந்தது.
இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்று அழைக்கப்படும் இந்த புதிய தளமானது இந்தியாவில் ஸ்ட்ரீமிங் பிஸினஸையே மாற்றும் வகையில் உள்ளது. இந்த தளத்தின் தலைவர் நிதா எம். அம்பானி ஆவார். இது இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்குகளை வழங்குவதற்கான தளத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இந்த தளம் ஸ்ட்ரீமிங் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற தளங்களை விஞ்சியுள்ளது. மேலும் லாபம் ஈட்ட கஷ்டப்படும் சில தளங்களை கையகப்படுத்துவதன் மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் மேலும் விரிவடையும் நிலையில் உள்ளது.
கடந்த மாதம் வரை 100 மில்லியன் பேர் காசு கட்டி ஜியோ ஹாட்ஸ்டாரைப் பார்த்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது. ஆனால் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, ஐபிஎல் போட்டிகளைப் பார்ப்பதற்காகவே ஏராளமானோர் ஜியோ ஹாட்ஸ்டாரை சப்ஸ்கைரப் செய்கிறார்கள். இதனால், ஒரே மாதத்தில் 200 மில்லியன் சந்தாதாரர்களாக கூடியுள்ளனர்.
தொடங்கப்பட்டபோது, இந்த தளம் 50 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. டிஜிட்டல் பார்வையாளர்களை உயர்த்தியது மட்டுமல்லாமல், கட்டண டிவி நெட்வொர்க் அமைப்பில் 2 மில்லியன் வீடுகளையும் சேர்த்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐபிஎல் போட்டியும் சராசரியாக ஒரு பயனருக்கு 60 முதல் 100 நிமிடங்கள் வரை பார்க்கும் நேரத்தைக் கொண்டிருப்பதால், பார்வையாளர்களின் அதிக ஈடுபாட்டை தளம் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.