கல்யாண தேதி சொன்ன அமீர் - பாவனி... குவியும் வாழ்த்துக்கள்!

Aamir  Bhavani  Marriage
Aamir Bhavani Marriage

சின்னத்திரையில் காதல் ஜோடியாக வலம் வரும் அமீர் - பவானி இருவரும் தங்களது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்கிற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் பாவனி ரெட்டி. நான்கே மாதங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்ததாக பாசமலர் என்கிற தொடரில் நடிக்க கமிட் ஆனார். அந்த சீரியலில் நடித்தபோது அவருக்கும் அந்த தொடரின் நாயகன் பிரதீப் குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று பிரதீப்பை திருமணம் செய்துகொண்டார் பாவனி.

தொடர்ந்து பிரதீப் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த பாவனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்கிற சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், பாவனிக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

ஆனாலும் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்த பாவனி, தான் ராசியில்லாதவர் என அடிக்கடி புலம்பியது அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எல்லாம் ஃபேமஸானார். இந்த நிகழ்ச்சியில் தான் தனது வாழ்க்கை துணை இவருக்கு கிடைத்தது. அமீர் ஒருதலையாக பாவனியை காதலித்து வந்தார். அதற்கு பாவனி மறுப்பு தெரிவித்து வரவே, ஜோடி டான்ஸ் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
மீண்டும் இணைந்த விஜய், திரிஷா… ட்ரெண்டிங்கில் The Goat படம்.. லீக்கான செய்திகள்!
Aamir  Bhavani  Marriage

தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், 2 வருடங்களாக லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து துணிவு படத்தில் நடித்து அசத்தியிருப்பர். இவர்களின் திருமண அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இவர்கள். வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளபோவதாக அறிவித்துள்ளனர். இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், தம்பதிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com