மீண்டும் இணைந்த விஜய், திரிஷா… ட்ரெண்டிங்கில் The Goat படம்.. லீக்கான செய்திகள்!

Vijay and Trisha
Vijay and Trisha

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமான The Goat படத்தின் சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அந்தவகையில் இப்படத்தில் விஜயுடன் மீண்டும் திரிஷா இணைந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் நல்ல வசூலை ஈட்டியது. இதனையடுத்து லியோ படம் வெளியான உடனே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அந்தப் படத்தில் ஸ்னேகா, லைலா, பிராசந்த் ஆகியோரும் வெகுக் காலத்திற்குப் பிறகு சேர்ந்து நடிக்கப்போவது பூஜை வீடியோ மூலம் தெரியவந்தது. இதனையடுத்து சமீபத்தில் The Goat படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

விஜய் அரசியலில் இறங்கியதால் இந்தப் படத்திற்குப் பிறகு இன்னும் ஒரே ஒரு படம் மட்டுமே நடிக்கப்போவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து யார் அவர் படத்தை இயக்குகிறார் என்பதுத் தெரியாமல் ரசிகர்கள் இன்று வரைக் கணித்து மட்டுமே வருகின்றனர்.

இந்தநிலையில் The Goat படத்தின் சில தகவல்கள் வெளியானதால் X தளத்தில் இப்படம் ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்தவகையில் The Goat படத்தின் இறுதிக் காட்சிகளின் படப்பிடிப்பிற்காக விஜய் அடுத்த வாரம் கேரளா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இறுதிக்காட்சிகளைத் திருவனந்தபுரத்தில் நடத்தப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது.

விஜய் காவலன் படத்திற்குப் பிறகு, அதாவது சரியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேரளா செல்லவுள்ளார். இதனால் கேரளாவிலும் பெரிய அளவில் விஜய் ரசிகர்கள் உள்ளதால் அவர்களுக்கு இது ஒருப் பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. மேலும் விஜய் படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளா ரசிகர்களை நேரில் சந்திக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பாங்காக்கில் தனுஷின் 'குபேரா' திரைப்பட படப்பிடிப்பு!
Vijay and Trisha

அடுத்ததாக லியோ படத்தை அடுத்து திரிஷா விஜயுடன் The Goat படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. இது திரிஷாவின் கேமியோ ரோலாகும். திரிஷாவின் காட்சிகள் ஸ்டூடியோவில் இரண்டு நாட்களில் படம்பிடிக்கப்பட்டது என்றும் இது ஒரு பாடல் படப்பிடிப்பாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தினர் கூறியுள்ளனர். இதற்கு முன்பாக இந்த கேமியோ ரோலிற்கு திரிஷாவிற்குப் பதிலாக அனுஷ்கா ஷெட்டியிடம் படக்குழுப் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் விஜய் வில்லன் மற்றும் ஹீரோ ரோலில் நடிக்கிறார். இது ஒரு Time travel படம் என்றும் கூறப்படுகிறது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com