விமர்சனம்: ACCUSED - சைக்கலாஜிக்கல் டிராமா!
ரேட்டிங்(3 / 5)
உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண் என்ன மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்? அதை எப்படிக் கடந்து வருவது? போன்ற பெண்களுக்கான விழிப்புணர்வுப் படம் இது.
பொதுவாக காலம் காலமாக ஆண்கள் மீது வைக்கப்படும், மீடு (#ME TOO) பிரச்சனை ஒரு பெண்ணின் மீது வைக்கப்படும்போது அதன் தாக்கங்கள் என்ன? என்ற வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப் படம் பெண்களின் பிரச்சனைகளைப்பேசுகிறது.
இதே டைட்டிலில் 2025ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி உள்ள இந்த ஹிந்திப் படத்தில் கொங்கனா சென், பிரதிபா ரந்தா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கிறார்கள். அனுபூதி காஷ்யப் இயக்கி இருக்கிறார். இது 'U' படம் தான், குடும்பத்துடன் பார்க்கலாம். ரன்னிங்க் டைம் 105 நிமிடங்கள் தான். சின்னப்படம். டைட்டில் டைம் கட் பண்ணினால் 97 நிமிடங்கள் தான் படம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி லண்டனில் ஒரு மிகப்பெரிய தனியார் மருத்துமனையில் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். இவருக்குத் திருமணம் ஆகி விட்டது. இவரது வாழ்க்கைத்துணை இன்னொரு தனியார் மருத்துமனையில் மருத்துவராக இருக்கிறார். ஒரு குழந்தையைத்தத்து எடுத்து வளர்க்க முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
நாயகி 15 வருடங்களாக இதே மருத்துமனையில் சிறப்பாகப் பணியாற்றியதால் அவருக்குப் பதவி உயர்வு கிடைக்க இருக்கிறது. இதே மருத்துமனையில் டீன் டாக்டர் ஆகப்பணியாற்ற பதவி உயர்வு கிடைக்க இருக்கிறது.
இந்த சமயத்தில் தான் அந்த மருத்துமனை நிர்வாகத்துக்கு ஒரு இமெயில் வருகிறது. நாயகி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி அந்தப் புகார் இருக்கிறது. நிர்வாகத்துக்கும், நாயகிக்கும் பெரிய அதிர்ச்சி.
தொடர்ந்து இதே போல எட்டு வெவ்வேறு மெயில்கள் வருகின்றன. நாயகி சஸ்பெண்ட் செய்யப்படுகிறாள். விசாரணை நடக்கிறது.
சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் பரவி நாயகிக்குப் பெயர் கெடுகிறது. நாயகியின் வாழ்க்கைத்துணையும் உண்மை நிலவரம் கண்டறிய ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவை நியமிக்கிறார். இதற்குப் பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித் திரைக்கதை.
திரைப்பட இயக்குனர் அபர்ணா சென் அவர்களின் மகள் ஆன கொங்கணா சென் சர்மா இரு தேசிய விருதுகளை வென்றவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர் (2003), தல்வார் (2016) போன்றவை அவர் பெயர் சொல்லும் படங்கள். நாயகி ஆக அவரது ஆளுமை மிக்க நடிப்பு தமிழ் சினிமாவில் ஜெயலலிதாவை நினைவு படுத்த்துகிறது. அவரது உடல் மொழி, ஆடை வடிவமைப்பு அனைத்தும் அருமை. டீன் டாக்டருக்கு உண்டான கெத்தை அவர் வெளிப்படுத்துவதும், விசாரணை அதிகாரியை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் இடமும் செம.
லாபட்டா லேடிஸ் (2023) படம் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்த பிரதீபா ராந்தா நாயகிக்கு வாழ்க்கைத் துணையாக வருகிறார். இவரது நுணுக்கமான நடிப்பு, சண்டை போடும் உரிமை, கலங்குவது, அழுவது என நடிப்பில் பல பரிமாணங்களைத் தொட்டு இருக்கிறார்.
படத்தில் இந்த இரு முக்கியமான கேரக்டர்கள் தவிர மீதி அனைத்து நடிக, நடிகையரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.
டெக்னிக்கல் அம்சங்கள் ஆன ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங்க் அனைத்தும் கச்சிதம். கதைக்களம் லண்டன் என்பதால் காட்சிகளில் ஒரு ரிச்னஸ் தெரிகிறது.
சபாஷ் டைரக்டர்
சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தை குடும்பத்தோடு பார்க்கும் அளவு கண்ணியமாக நெறியாள்கை செய்த விதம்.
நாயகி மீது தப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை சஸ்பென்ஸ் ஆகக்கொண்டு போன விதம்.
ஒரு பெண் மீது கேரக்ட்டர் அஸாசினேஷன் எப்படிப் பிரயோகிக்கப்படுகிறது எனக்காட்டிய விதம்.
குற்றம் சுமத்தப்பட்டதாலேயே இந்த சமூகம் எப்படி அவரை டீல் செய்கிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாகப் படமாக்கிய விதம்.
கூர்மையான வசனங்கள் படத்துக்குப்பெரிய பலம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
இந்தப்படத்தை சைக்கலாஜிக்கல் திரில்லராகக் கொண்டு செல்வதா? பேமிலி டிராமாவாகக் கொண்டு செல்வதா? என்ற தடுமாற்றம் இயக்குனரிடம் படத்தின் பின் பாதியில் தெரிகிறது.
குழந்தை தத்து எடுக்க முடிவு எடுத்த பின் இந்தக் குற்றச்சாட்டால் வாய்ப்பு கை நழுவிப்போவதைக் கண்டு கண்ணீர் விடுவது எதற்கு? எத்தனை அநாதை விடுதிகள்? எத்தனை குழந்தைகள் இருக்கின்றன?
நாயகிக்கு இதற்கு முன் வேறொருவருடன் ஒரு வாழ்க்கை இருந்தது, அவருடன் பிரிவு நிகழ்ந்தது எதனால்? என்ற சம்பவங்கள் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13 + 'Clean U'
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது ஒரு மெலோ டிராமா. திரைக்கதை மெதுவாகத்தான் நகரும், பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், படம் பார்க்க ஆண்களுக்குப் பொறுமை மிக அவசியம்.

