Fourth Floor
Fourth Floor

விமர்சனம்: Fourth Floor - அந்த 4-வது மாடியில் அப்படி என்னதான் இருக்கிறது?

Published on
ரேட்டிங்(2 / 5)

சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் நடிப்பில் வந்துள்ள படம் Fourth Floor. சென்னையில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் நான்காவது தளத்தில் தங்கி காணாமல் போன தனது காதலியை தேடுகிறார் ஆரி. அங்கே சில மனிதர்களை சந்திக்கிறார். அந்த மனிதர்கள் அனைவரும் முன்பே கொலை செய்யப்பட்டவர்கள் என்றும், தான் தங்கியிருக்கும் நான்காவது மாடி வீட்டிற்கும் தொடர்பு இருப்பது ஆரிக்கு தெரியவருகிறது. இது போன்ற அம்மானுஷ்ய விஷயங்களுக்கும், காணாமல் போன தனது காதலிக்கும் என்ன தொடர்பு என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

ப்ளஸ் - படத்தில் ஆரம்பத்தில் வரும் அமானுஷ்யம், சில இடங்களில் வரும் கனவுகள், போன்றவைகள் ரசிக்க வைக்கிறது. இறந்து போனவர்களாக வரும் பெரியவர் மட்டும் நடிப்பில் மனதில் நிற்கிறார். ஆரிக்கு நீண்ட நாட்களுக்கு பின் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டுமே என்ற எண்ணம் இருப்பது இவர் நடிப்பில் தெரிகிறது. தனது குழந்தையை தேடி கண்டுபிடிக்கும் போதும், காதலியை தேடும் போதும் ஆரியின் நடிப்பு பாராட்டும் படி இருக்கிறது. தருண் குமாரின் பின்னணி இசை திகிலுக்கு வலு சேர்க்கிறது.

மைனஸ் - இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட் இருந்த இடத்தில் சில மோசடிகள் நடந்தது. இதை மையப்படுத்தி தான் இந்த கதையை எழுதியிருக்கிறார். எழுதியவர் சில ட்விஸ்ட் வைத்து எழுதியிருந்தால் சற்று சுவாரசியமாக இருந்திருக்கும். நடப்பதற்கான காரணங்கள் முன்பே தெரிந்து விடுவதால், திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் 'சப்' என்று இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
தடயம் வெப் சீரிஸ் விமர்சனம் : சமுத்திரக்கனியின் எதார்த்தமான நடிப்பு.. ஆனால் திரைக்கதையில் தடுமாற்றம்..!
Fourth Floor

வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா படத்தின் ஆரம்பத்தில் வருகிறார். அதன் பிறகு 'ஆளைக் காணோம்' என்பதை போல் எந்த காட்சியிலும் வராமல் கிளைமாக்ஸில் வந்து விட்டு 'எஸ் சார்' என்கிறார். மற்ற வில்லன்களும் பயமுறுத்துகிறேன் பேர் வழி என்ற பெயரில் சிரிப்பை வர வைக்கிறார்கள். 'டைம் பாம் எப்ப வெடிக்கும்னு தெரியல, நீங்க எல்லாம் என்ன வில்லன்கள்' என்று கேட்கும் படியாக கிளைமாக்ஸ் உள்ளது.

தீப்சிகா, பவித்ரா என இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இருவரும் கெஸ்ட் ரோலில் வருவது போல் வந்து செல்கிறார்கள்.

தருண் குமார் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பாடல்கள் நாட் குட்.

அப்பார்ட்மெண்ட்டில் பேய் இருக்கிறதா? என்று ஆராய்ச்சி செய்ய ஒரு யூ டூப் டீம் வருகிறது. இந்த டீம் கடைசி வரை எதையும் கண்டுபிடிக்க முயற்சி கூட செய்யவில்லை.

மொத்தத்தில் கூட்டி, கழித்து பார்த்தால் இந்த Fourth Floor-ல் பிளஸ் களை விட மைனஸ்களே அதிகம் உள்ளன.

ப்ளஸ் அதிகமாக இருந்திருந்தால் இந்த நான்காவது தளத்தை (Fouth Floor ) பாருங்கள் என்று தைரியமாக சொல்லி இருக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com