ரசிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan
Sivakarthikeyan

ரசிகை ஒருவரின் கனவை நிறைவேற்றிய சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஹிட் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரின் அமரன் பட டீசர் வெளியாகி கவனம் பெற்றது. ரசிகர்களின் செல்ல பிள்ளையாகவும், ரசிகைகளின் பேவரைட்டாகவும் திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தனது ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகம் விரும்புவார்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு வருபவர்தான் தன்சீரா. இவர் சிவகார்த்திகேயனின் மிக பெரிய ரசிகை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பல நாட்களாக இவர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் தற்போது அவரின் ஆசைக்கு ஒரு சிறகு முளைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சீரியலில் எண்ட்ரி கொடுத்த கௌசல்யா... என்ன சீரியல் தெரியுமா?
Sivakarthikeyan

விஜய் டிவி மூலம் சிவகார்த்திகேயனிடம் அனுமதி பெற்று, தன்சீராவிற்கு Surprise கொடுக்கும் விதமாக அவரை சிவகார்த்திகேயனிடம் அழைத்து சென்று, அவரை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது இந்த நிகழ்வு. நடிகர் சிவகார்த்திகேயன் பாடகி தன்சிராவை நேரில் சந்தித்து, அவருடன் உரையாடியுள்ளார். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜட்ஜ்களிடம் இது என் தங்கச்சி ஆகையால் மார்க்கை கொஞ்சம் பார்த்து போடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com