குட்நியூஸ் சொன்ன நடிகை ஆலியா மானசா!

Alya Manasa
Alya Manasa

பிரபல நடிகை ஆலியா மானசா வீட்டில் விசேஷம் களைகட்டியுள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி டிஆர்பி ரேட்டை எகிர வைக்கும் சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியலை மாற்றி இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆலியா மானசா தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

நடிகை ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த தொடரில் இவர் நடித்த செண்பா கதாபாத்திரம் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தது. ராஜா ராணி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இருவரும் திருமணம் கொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் லீட் ரோலில் நடித்தார்.

இதையும் படியுங்கள்:
காதலியை கரம்பிடித்தார் பிக்பாஸ் அபிஷேக் ராஜா!
Alya Manasa

ராஜா ராணி தொடரில் நடித்து வந்த போதே, இரண்டாவதாக ஆலியா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதே அந்த தொடரில் நடித்து வந்தார். இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு குட்நியூஸ் ஒன்றை கூறியுள்ளார் ஆலியா மானசா. ஆலியா மானசா - சஞ்சீவ் இருவரும் சென்னையில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது வீட்டின் வேலைகள் முடிவுக்கு வந்துவிட்டது. வீட்டின் கிரகபிரவேசத்திற்கு தற்போது இருவரும் தயாராகி வருகின்றனர். வீட்டை சுத்தம் செய்யும் வேலைகள் தற்போது நடந்து வருவதாக புகைப்படத்துடன் ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com