2 சீரியல்களை சமாளிக்க முடியவில்லை... விஜய் டிவிக்காக சன் டிவி சீரியலில் இருந்து விலகும் நடிகை!

Serials
Serials

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

2 தொலைக்காட்சியில் வெவ்வேறு சீரியல்களில் கமிட்டாகி இருக்கும் நடிகை ப்ரீத்தா ரெட்டி தற்போது ஒரு சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல நடிகைகள், ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நேரமில்லாமல் இருக்கும். அப்படி ஒரு சீரியல் நடிகை தான் தற்போது கமிட்மெண்ட் காரணமாக சன் டிவியில் இருந்து விலகவுள்ளார்.

Preetha Reddy
Preetha Reddy

ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் தொடர்களில் ஒன்று, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல். மிகவும் யதார்த்தமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், சுருதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தா ரெட்டி. கதாநாயகிகளில் ஒருவராக இந்த சீரியலில் இவர் நடித்து வரும் நிலையில், இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ப்ரீத்தா ரெட்டி, இந்த சீரியலில் மட்டுமின்றி, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரிலும் அக்ஷயா என்கிற கதாபாத்திரத்தில், கதாநாயகனின் தங்கையாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு ப்ரீத்தா ரெட்டி சில சீரியல்களின் நடித்திருந்தாலும், இந்த சீரியல் தான் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்று தந்தது.

இதையும் படியுங்கள்:
ராதிகாவிடம் சிக்கி கொண்ட கோபி... பாக்கியலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன?
Serials

மேலும் இனியா மற்றும் சிறகடிக்க ஆசை என இரண்டு சீரியல்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க முடியாமல் இருப்பதால் இவர் தற்போது இனியா சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது . என்னதான் சன் டிவி மூலம் பிரபலமடைந்தாலும், சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் லீடிங் ரோலில் நடித்து வருவதால், இனியா சீரியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

logo
Kalki Online
kalkionline.com