
80, 90ஸ்களில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன இவர் அப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். பிறகு விஜயகாந்துடன் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். இந்த படத்தில் இவர் பேசிய வசனும், மனோரம்மா பேசிய வசனமும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
மாமியார், மருமகள் குறித்து பேசும் இவர்களின் பேச்சு அட்டகாசமாக இருக்கும். தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் படம் நடித்து வந்தார். சின்ன மாப்பிள்ளை படத்தில் காதோரம் லோலாக்கு பாடலில் சிறிய ஸ்டெப்களை போட்டு மக்களை துள்ள வைத்து ரசிக்க செய்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்த இவர் டப்பிங் கலைஞராக, இசையமைப்பாளராக, நடன கலைஞராகவும் தனது திறமைகளை காட்டியுள்ளார். தொடர்ந்து 2002ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்ததால் நடிப்பில் இருந்து விலகியிருந்தார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் பிரிந்தனர்.
ஏற்கனவே சில காலம் சின்னத்திரையில் குதித்த சுகன்யா, ஆனந்தம் சீரியலில் நடித்து அசத்தியிருப்பார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். விரைவில் ஒளிப்பரப்பாக போகும் புதிய சீரியல் ஒன்றில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.