"சேட்டா" அண்ணனை இழந்த தங்கை உருக்கம்... வைரலாகும் போஸ்ட்!

Actress Sujitha Surya Kiran
Actress Sujitha Surya Kiran

நடிகரும் இயக்குனருமான சூரிய கிரண் திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். மருத்துவ டெக்னாலஜி வளர்ந்து வரும் நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு திடீரென இவர் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது என்றே சொல்லலாம்.

படிக்காதவன் படத்தில் தான் இவர் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லலாம். ரஜினி ஸ்டைலை சிறுவயது கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து பெயர் எடுத்திருப்பார். இதை தாண்டி கல்லுக்குள் ஈரம், மௌன கீதங்கள் உள்ளிட்ட படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருப்பார்.

இவரின் சகோதரியான சுஜிதாவும் சிறுவயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவர் தான் முந்தானை முடிச்சி, மந்திர புன்னகை உள்ளிட்ட படங்களில் சத்யராஜ், பாக்யராஜிற்கு மகன், மகளாக நடித்து அசத்தியிருப்பார்.

இதையும் படியுங்கள்:
மனோஜிடம் சிக்கி கொண்ட ரோஹினி... அடுத்து என்ன நடக்கும்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!
Actress Sujitha Surya Kiran

இந்த நிலையில் சகோதரனை இழந்த நடிகை சுஜிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்தை பகிர்ந்துள்ளார். அதில், அண்ணா, ஆத்மா சாந்தி அடையட்டும். நீ எனக்கு சகோதரர் மட்டும் இல்லை, தந்தையும், ஹீரோவும் கூட, நான் நிறைய முறை உனது திறமையையும், பேச்சையும் கண்டு வியந்திருக்கிறேன். நிறைய வழியில், உங்கள் இருப்பு கற்று கொடுத்திருக்கிறது. மறு பிறவி என்று ஒன்று இருந்தால், அதில் உன் கனவுகள் நிஜமாகட்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சுஜிதாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com