மனோஜிடம் சிக்கி கொண்ட ரோஹினி... அடுத்து என்ன நடக்கும்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!

Siragadikka Aasai
Siragadikka Aasai

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்தை எட்டியுள்ளது.

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. இதனால் முத்து, மீனாவிற்கு பூக்கடை திறந்து கொடுக்கிறார். இது நல்ல முறையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் இதுவரை ஒளிபரப்பான கதைக்களத்தில் முத்து, மீனாவிற்காக ஒரு பெரிய ஆரடர் பிடித்து கொடுக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கல்யாண தேதி சொன்ன அமீர் - பாவனி... குவியும் வாழ்த்துக்கள்!
Siragadikka Aasai

500 மாலைகள் கட்டிக் கொடுத்தால் 2 லட்சத்திற்கு மேல் பணம், இரவு முழுவதும் கண் முழுத்து மீனா மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் மாலை கட்டி எப்படியோ முடித்துவிட்டார்கள். அதை மண்டபத்திற்கு கொண்டு செல்லும் நேரத்தில் சிட்டி வண்டியை தூக்க எப்படியோ பல போராட்டத்திற்கு பிறகு முத்து-மீனா மாலையை சொன்னபடி கொடுத்துவிட்டார்கள், பணமும் பெற்றுவிட்டார்கள். இதனால் இருவரும் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் திழைத்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

இது ஒரு புறம் இருக்க, ரோஹினி அவரது கணவர் மனோஜிடம் வசமாக சிக்கி கொள்கிறார். மனோஜ் ரோஹினி பார்லர் வந்து பெயரை பார்த்துவிடுகிறார். ரோஹினியிடம் அம்மா பெயர் தானே இருந்தது இது என்ன என்று கேட்கிறார், ரோஹினியும் அதிர்ச்சியில் நிற்கிறார். இதற்கு ரோஹினி என்ன சொல்லி சமாளிப்பார் என்று இனி வரும் நாட்களிலேயே தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com