முந்தைய OTT சாதனைகளை முறியடித்த அல்லு அர்ஜூனின் புஷ்பா 2: தி ரூல்!

Pushpaa 2 The Rule
Pushpaa 2 The Rule
Published on

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா தி ரைஸ் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் சக்கை போடு போட்டது. இந்த திரைப்படத்தின் கதைபடி ஊர் செல்வந்தரின் தாலி கட்டாத காதலிக்கு பிறந்த மகனாக புஷ்பராஜ் இருக்கிறார். தந்தை மறைவின் போது கூட, அவருடைய வீட்டில் பார்க்க அனுமதிக்கப்படாமல் தாயோடு அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறார். அவர் தந்தை கொடுத்த வீடும் அவரது முதல் மனைவியின் மகனால் பறிக்கப்படுகிறது. வலியோடு வளரும் மிகவும் தைரியசாலியான, திமிர் பிடித்த அந்த சிறுவன், முதலில் சிறிய செம்மரக் கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறார். புஷ்பராஜின் துணிச்சல் அவனை மிகப்பெரிய செம்மரக் கடத்தல்காரனாக மாற்றுகிறது. பால் விற்கும் ஶ்ரீ வள்ளியை காதலிக்கிறான் புஷ்பா. இடையில் பல செம்மரக் கடத்தல்காரர்கள் அவனால் வீழ்த்தப்பட்டு எதிரிகளாக மாறுகின்றனர். ஊருக்கு வரும் கொடூரமான வனப்பாதுகாப்பு SSP ஷெகாவத்தின் எதிர்ப்பையும் சம்பாதிக்கிறான் புஷ்பா. முதல் பாகம் புஷ்பா வள்ளியை திருமணம் செய்வதோடு முடிகிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன், நாயகியாக ராஷ்மிகா மந்தன்னாவும், வில்லனாக சுனிலும் பகத்பாசிலும் நடித்திருந்தனர். ஒரு குத்து பாடலுக்கு சமந்தாவும் ஆடி இருந்தார். இத்திரைப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். புஷ்பா: தி ரைஸின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தப் படத்தை 270 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக  கூறப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் திரையரங்குகளுக்குப் பிந்தைய ஒளிப்பரப்பு உரிமைகளை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம், டிஜிட்டல் உரிமைகளின் அடிப்படையில் அதிக மதிப்புள்ள இந்தியப் படங்களில் ஒன்றாக உள்ளது. இவ்வளவு விலைக்கு ஒடிடியில் ஒரு திரைப்படம் விற்பனை ஆவது இந்திய சினிமா உலகில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓடிடி உரிமம் 270 கோடிக்கும், ஹிந்தி பதிப்பு 200 கோடிக்கும் விற்பனை ஆகி படத்தின் பட்ஜெட்டான 500 கோடியில் 470 கோடியை இப்போதே விற்பனை செய்து விட்டது. மேலும் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை பிரபல AGS நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ஆயினும் அதன் விற்பனை தொகை விவரம் தெரியவில்லை. எப்படியும் பட்ஜெட்டை தாண்டி விற்று விட்டார்கள். இனி தெலுங்கு, கன்னட, மலையாள உரிமைகள் விற்பனை வேறு உள்ளது. 

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப் பெரிய மிக சுவாரஸ்யமான 6 திரையரங்கங்கள்!
Pushpaa 2 The Rule

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அல்லு அர்ஜுனுக்கும் சுகுமாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதாக வதந்திகள் வந்தன. இருப்பினும், சமீபத்திய நிகழ்வில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டபோது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

தேவிஶ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்களை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதன் கதைக்களம், இசை மற்றும் விஷுவல் எஃபெக்ட் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ANGRY YOUNG MEN: Season 1 - "நான் சாட்சிக் கையெழுத்து போட்டால் அந்தத் திருமணம் நிலைக்காது என் ராசி அப்படி"
Pushpaa 2 The Rule

அல்லு அர்ஜுனைத் தவிர, படத்தில் தனஞ்சயா, ஜெகதீஸ் பிரதாப், ராவ் ரமேஷ், அஜய், சுனில் மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். 'புஷ்பா 2: தி ரூல்' இந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com