அரண்மனை போல் வீடு.. கனவு இல்லத்தை கட்டி முடித்த ஆல்யா - சஞ்சீவ் ஜோடி... வைரலாகும் போட்டோ!

Alya Manasa and Sanjeev
Alya Manasa and Sanjeev

பிரபல சின்னத்திரை ஜோடியான ஆலியா மானசா - சஞ்சீவ் தங்களது கனவு இல்லத்தை கட்டிமுடித்துள்ள நிலையில், அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி டிஆர்பி ரேட்டை எகிர வைக்கும் சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியலை மாற்றி இருக்கிறார்.

நடிகை ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த தொடரில் இவர் நடித்த செண்பா கதாபாத்திரம் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தது. ராஜா ராணி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் லீட் ரோலில் நடித்தார். ராஜா ராணி தொடரில் நடித்து வந்த போதே, இரண்டாவதாக ஆலியா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதே அந்த தொடரில் நடித்து வந்தார். இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸை பகிர்ந்தார். ஆலியா மானசா - சஞ்சீவ் இருவரும் சென்னையில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது வீட்டின் வேலைகள் முடிவுக்கு வந்துவிட்டது. வீட்டின் கிரகபிரவேசத்திற்கு தற்போது இருவரும் தயாராகி வருகின்றனர். வீட்டை சுத்தம் செய்யும் வேலைகள் தற்போது நடந்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
ஞானத்தை அடையும் வழி இதுதான்: சமந்தாவின் சூப்பர் டிப்ஸ்!
Alya Manasa and Sanjeev

தற்போது இந்த வீடு ஓரளவு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. இந்த வீட்டை கட்டுவதற்கு தங்களுக்கு எவ்வளவு செலவானது என்று துல்லியமாக தெரியாது என்றும், தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை வீட்டை கட்டும் வேலைக்கு அப்படியே கொடுத்து வந்ததாகவும் சஞ்சீவ், ஆலியா கூறியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் அடடே இவ்வளவு பெரிய வீடா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com