ஞானத்தை அடையும் வழி இதுதான்: சமந்தாவின் சூப்பர் டிப்ஸ்!

Samantha
Samantha
Published on

ஞானத்தை அடையும் முயற்சியில் இறங்கியுள்ள சமந்தா, அது தொடர்பாக நமக்கு அளித்துள்ள டிப்ஸ் என்னவென்று இப்போது பார்ப்போம்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இவர் ஒரே பாட்டிற்கு மட்டும் நடனமாடி, படத்தின் ஒட்டுமொத்த வெற்றியையும் உறுதி செய்தவர். இந்த ஒரு பாட்டிற்கு மட்டும் சமந்தா 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த குஷி திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து மெகா ஹிட் வெற்றியைக் கொடுத்தது. அதன் பிறகு இப்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்குப் பிறகு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா, அதிலிருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் நடிக்கத் தயாரானார். இருப்பினும் அதன் பிறகு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, பல மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார். குடும்ப வாழ்க்கையில் கசப்பான நிகழ்வு மற்றும் கொடிய நோய் என அடுத்தடுத்து வந்த சோதனைகளைச் சமாளித்து முன்னேறி வருகிறார் நடிகை சமந்தா. தற்சமயம் 2 படங்களை தன்வசம் வைத்துள்ள சமந்தா, மன நிம்மதிக்கு அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

இப்படி சுற்றுலா சென்ற போது, கோவையில் உள்ள ஈஷா தியான மைத்திற்கும் சென்றுள்ளார். அங்கு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்ட சமந்தா அமைதியின் தேவையை உணர்ந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது, ஞானத்தை அடைய என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழி என்ன? என்பது குறித்து தனது ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இது இணையத்தில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சமந்தா அளிக்கும் டிப்ஸ் என்னவென்று பார்ப்போம்:

"அனைவருக்குமே மன நிம்மதி என்பது தேவை. நிம்மதி இல்லாத வாழ்வு, வாழும்போதே நரகத்தை அனுபவிப்பதற்குச் சமம்.

இதையும் படியுங்கள்:
தயாரிப்பாளராக மாறிய சமந்தா...புதிய நிறுவனம் தொடக்கம்!
Samantha

நம் வாழ்வை சமநிலைப் படுத்த நமக்கு ஒருவர் தேவைப்படுகிறார். அவர் குருவாகவோ அல்லது நல்ல நண்பர்களாகவோ கூட இருக்கலாம்.

உங்களுடைய வாழ்வினை ஒளிரச் செய்பவரைக் கண்டுவிட்டால், அதைவிட வேறென்ன பாக்கியம் இருக்கப் போகிறது.

நீங்கள் ஞானத்தைப் பெற நினைத்தால், அதனைத் தேட வேண்டும். தேடல் இல்லையெனில் வாழ்க்கை எப்படி பிரகாசமாக ஒளிரும்.

ஒவ்வொருவரின் மீதும் ஏதோ ஒன்று திணிக்கப்பட்டு வருவதால், யாரும் ஞானத்தை அடைய முயற்சி செய்ய முன்வருவதில்லை.

ஞானத்தை பெற எது உங்களைத் தடுக்கிறதோ, அதனை முதலில் நீங்கள் களைந்தெறிய வேண்டும்.

ஞானத்தைப் பெற உங்களின் உழைப்பு ஒன்றே மூலதனம். உழைத்துக் கொண்டே முயற்சி செய்யுங்கள். வெகு விரைவில் ஞானத்தை அடைந்து விடுவீர்கள்" என சமந்தா கூறியுள்ளார்.

நல்லதை யார் சொன்னால் என்ன? கேட்டுக் கொள்வது சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com