அன்பே வா சிரீயல் நடிகைக்கு விரைவில் டும்டும்டும்... மாப்பிள்ளை இந்த நடிகரா?

Shreegopika
Shreegopika

பிரபல நடிகையும் மாடலுமான ஸ்ரீ கோபிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

சின்னத்திரையில் வலம் வரும் நடிகர் நடிகைகள் பலரும் வெள்ளித்திரை நடிகர், நடிககைகளை திருமணம் செய்து சினிமா ஜோடியாக வலம் வருவது வழக்கம் தான் தற்போது அந்த வரிசையில் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவும் இணைந்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ கோபிகா ஓவியா நடித்த 90ML படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து Wolf என்ற படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து மாடலிங் செய்து வந்த அவர், சன் டிவியில் ஓளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரீ கோபிகா.

சுந்தரி சீரியலில் சுந்தரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதுபோல அணுவிற்கு அதிகமான முக்கியத்துவம் இருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் சீரியலில் இறந்து போய்விட்டார் என்று கதை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ கோபிகா தான் சுந்தரி சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதனால் மீண்டும் அவர் சீரியலில் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு வெளியான அன்பே வா சீரியலிலும் முக்கிய கேரக்டரில் கோபிகா நடித்திருந்த நிலையில் அந்த சீரியலும் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிம்பிளாக நடந்து முடிந்த பிரேம்ஜி திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா?
Shreegopika

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ கோபிகாவுக்கும் நடிகர் வைசாக் ரவி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 2016 முதல் எனது நண்பராக, காதலனாக இருக்கும் வைசாக் உடன் மகிழ்ச்சியாக அதிகாரப்பூர்வமாக நிச்சயம் செய்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இவரது திருமண தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள ஸ்ரீகோபிகா - வைசாக் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இவர்களின் நிச்சயதாரத்த புகைபப்டங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com