சிம்பிளாக நடந்து முடிந்த பிரேம்ஜி திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா?

Premji marriage
Premji marriage

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மத்தியில் நடிகர் பிரேம்ஜியின் திருமணம் சிம்பிளாக கோயிலில் நடந்து முடிந்தது. 90ஸ் கிட்ஸ்களில் ஒருவரான இவரின் திருமணத்தை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்து பிரபலமானார். தொடர்ந்து சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அசத்தியிருப்பார். பல படங்களில் நடித்திருந்தாலும் தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களே இவருக்கு அதிக பெயர் பெற்று தந்தது.

அதாவது வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்கள் பிரேம்ஜிக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தனது சகோதரர் இயக்கும் படத்தில் மட்டுமே அதிகளவு நடித்துவருகிறார். தற்போத் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான GOAT படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.

இதையும் படியுங்கள்:
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் வித்யுத்... மாஸாக வெளியானது SK23 அப்டேட்!
Premji marriage

இப்படி பெயர் எடுத்திருந்த பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். அந்த வகையில் நேற்று திருத்தணி முருகன் கோயிலில் சிம்பிளாக குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் நடந்து முடிந்தது. இணையத்தில் இவர்களின் திருமண புகைப்படங்கள் தான் வைரலாகி வருகின்றன.

பிரேம்ஜி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் இந்து என்றும், அவர் இதற்கு முன்பாக வங்கி துறையில் பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்வில் பிரேம்ஜி மைக்கில் பாடி அசத்திய வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்வு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com