அன்னபூரணி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... எப்போது தெரியுமா?

Annapoorani OTT release date
Annapoorani OTT release date

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான நீலேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, கார்த்திக் குமார், குமாரி சச்சு, அச்யுத் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் ட்ரைடண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் நாட் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது. சத்யன் சூர்யா ஒளிப்பபதிவு செய்துள்ளார்.

கடைசியாக பாலிவுட் புகழ் ஷாருக்கான் உடன் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படம் தான் அன்னப்பூரணி. இந்த படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி கணிசமாக வெற்றிபெற்றது. இந்த படம் ரூ.3.5 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. முதல் 2 நாட்களில் மட்டும் ரூ.1.2 கோடி வரை தான் வசூல் செய்திருந்தது.

இதையும் படியுங்கள்:
விரைவில் தளபதி 68 அப்டேட்... கிறிஸ்துமஸ் அன்று குட்நியூஸ் சொன்ன வெங்கட் பிரபு!
Annapoorani OTT release date

அதன் படி இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அன்னப்பூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியிலாவது நல்ல வரவேற்பை பெறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com