வன்மத்தைக் கக்கிய அர்னவ்… எச்சரித்த விஜய் சேதுபதி... ரசிகர்களின் கருத்து இதுதான்!

Arnav in BB 8
Arnav in BB 8
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

பிக்பாஸ் சீசன் 8 இரண்டாவது வாரத்தில் அர்னவ் எலிமினேட் ஆன நிலையில், போகும்போது வன்மத்தைக் கக்கிவிட்டார். இதனை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த சீசன் 8ல் தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி, விஜே விஷால், நா. முத்துக்குமரன், சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துக்கொண்டனர். போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து முதல் வாரம் ரவீந்திரன் எவிக்ட் செய்யப்பட்டார். போகும்போது ஒவ்வொருவரையும் பற்றி விமர்சனம் சொல்லி தெறிக்கவிட்டுப் போய்விட்டார்.

சென்ற வாரம் நடத்தப்பட்ட போட்டியில் பெண்கள் அணி வெற்றிபெற்றதால், ஜாக்குலினை நாமினேஷனிலிருந்து காப்பாற்றினர். இதனையடுத்து சனி மற்றும் ஞாயிறு விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்தார். இந்த வாரம் சம்மந்தி பஞ்சாயத்து விறுவிறுப்பாக இருந்தது. அதற்கு பின் ஜாக்லின் செய்த தவறை சுட்டி காட்டி இருந்தார். பின் தர்ஷா-அர்னவ் பேசிய விஷயத்தை குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார். அப்போது அர்னவ் ஆண்கள் அணியை பற்றி தர்ஷாவிடம் பேசி இருந்ததற்கு தர்ஷாவும் ஒத்துக் கொண்டதால் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வாரம் பஞ்சாயத்து எல்லாம் முடிந்தவுடன் வெளியேறும் அந்தப் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதனையடுத்து இந்த வாரம் அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார். இவர் வெளியே வந்தப்பிறகு பிக்பாஸ் வீட்டினரை வீடியோ மூலம் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“ ஜால்ரா பாய்ஸ். சத்யா, விஷால், தீபக் எல்லோருமே ஜால்ரா பாய்ஸ். டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. உங்களோட நான் பேசவில்லை என்பதற்காக நீங்கள் ஒரு டீம் சேர்ந்து என்னை ஒதுக்கி விட்டீர்கள்.” என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
என்னோட சாவு இப்படித்தான் இருக்க வேண்டும் – ஷாருக்கான்!
Arnav in BB 8

அதற்கு விஜய் சேதுபதி, “அர்னவ் கருத்த சொல்லுங்க அர்னவ், வன்மத்த கக்குற இடம் இல்ல இது. இப்படி எல்லாம் பேசக்கூடாது. உங்களுக்கு உள்ளேயே பேச வாய்ப்பு கொடுத்த போது அமைதியாக இருந்து இப்போது பேசக்கூடாது. அது ரொம்ப தவறு. உங்கள நாமினேட் பண்ணது பெண்கள் அணி, ஓட்டுப் போட்டது மக்கள். ஆண்கள் அணி எந்த விதத்துலையும் காரணம் கிடையாது. போகும்போது கருத்து, அறிவுரை சொல்லி விட்டு போங்கள்.. தேவை இல்லாமல் பேச வேண்டாம்.” என்று முகத்தில் அடித்தது போல விஜய் சேதுபதி சொன்னவுடன் அர்னவ் எதுவும் பேசாமல் சரி என்று அமைதியாகிவிட்டார். 

இதற்கு ரசிகர்கள் இதுதான் அர்னவின் உண்மை முகம்.. இப்போதுதான் வெளியே வருகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com