பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய சாவு இப்படிதான் இருக்க வேண்டும் என்று தனது ஆசையை கூறியிருக்கிறார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய சினிமாவின் ஒரு முக்கிய அங்கமாவார். இவருக்கு இந்தியா முழுவதுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாஸ் படங்கள் கொடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் இவர், கோலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் கடைசியாக ஜவான் படத்தில் நடித்தார். இந்தப் படம் 1000 கோடி வசூல் செய்தது. இதனையடுத்து இவரின் துன்கி படம் வெளியானது.
இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும். சென்ற ஆண்டு மட்டும் ஷாருக்கான் மூன்றுப் படங்களில் நடித்து பெரிய ஹிட் கொடுத்தார். பதான், ஜவான் மற்றும் துன்கி ஆகிய படங்கள் நல்ல வசூலை ஈட்டியது. அந்தவகையில் இந்த மூன்றுப் படங்களும் ரூ 2600 கோடிக்கும் மேல் வசூல் சாதனைப் படைத்தது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை வாங்கிய முதல் இந்தியர் இவர்தான். இந்த விருதைப் பெற்றப்பின் இவர் நன்றி தெரிவித்து பேசியுள்ளார்.
அவரிடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதாவது நீங்கள் எப்போதும் நடித்துக்கொண்டே இருக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஷாருக்கான், “ஆம், நான் மரணிக்கும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு யாராவது ஆக்ஷன் சொல்ல வேண்டும். அப்போது நான் இறப்பது போல் நடிகக் வேண்டும். ஆனால், ஆக்ஷன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் மீண்டும் எழுந்திருக்கக் கூடாது. நான் அப்படியே இறந்து போயிருக்க வேண்டும். இதுதான் எனது வாழ்நாள் கனவு.” என்று பேசினார். இது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.
தனது தொழிலை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதற்கான சான்றே இது. இது பலருக்கும் எமோஷ்னலை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கான் கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் உடையவர். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கி நடத்தி வருகின்றார். இந்த ஆண்டு கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.