விரைவில்... 'அது இது எது' ஷோ? குஷியில் ரசிகர்கள்!

athu ithu ethu
athu ithu ethu

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், எண்டர்டெயின் செய்யவும் புது புது நிகழ்ச்சிகளை கொண்டு வந்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இதில், பிக்பாஸிற்கும், குக்வித் கோமாளிக்கும் தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் குக்வித் கோமாளி ஆரம்பமாகிவிடும். ஆனால் குக்வித் கோமாளி ஷோவுக்கு எண்ட் கார்ட் போட்டது போல் அனைவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் புது நிகழ்ச்சி ஒன்றை கையிலெடுத்துள்ளது விஜய் டிவி.

அந்த வகையில் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்க விரைவில் அலப்பறையாக ஆரம்பம் ஆக உள்ளது அது இது எது நிகழ்ச்சி. சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். பின்னர் மா.கா.பா தொகுத்து வழங்கினார். சுமார் 10 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது புது சீசன் உடன் விரைவில் அலப்பறையாக ஆரம்பமாக உள்ளது. இதனால் விஜய் டிவியின் டிஆர்பியும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பாக்கியாவுக்கு போட்டியாக புது பிசினஸில் களமிறங்கும் கோபி... வைரலாகும் புரோமோ!
athu ithu ethu

இதற்கான புரோமோ வெளியாகிய நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com